Welcome, Guest
Username: Password: Remember me

TOPIC: அயன் பிணைப்பு, பங்கீட்டுவலுப்பிணைப்பு விளக்கம்?

எளிய மின்கலம், மின்பகுப்பில் முனைவுகளை கண்டறிதல். 4 years 5 months ago #567

  • Ardhytyan
  • Ardhytyan's Avatar
  • Offline
  • I'm iSr Newbie!
  • Posts: 1
  • Karma: 0
can you please tell me about ionic and covelant bonds
The administrator has disabled public write access.

அயன் பிணைப்பு, பங்கீட்டுவலுப்பிணைப்பு விளக்கம்? 4 years 5 months ago #568

  • Afdhaal
  • Afdhaal's Avatar
  • Offline
  • Administrator
  • Final Year Medical Student! Founder of iSr
  • Posts: 974
  • Thank you received: 1055
  • Karma: 37
இப் பிணைப்புகள் உருவாக்குவதன் ஒரே நோக்கம், தனது இறுதி ஓட்டு இலத்திரன்களை பூர்த்தியாக்குவதன் மூலம் ஒரு உறுதி நிலையை அடைவது ஆகும்.



மேலுள்ள படத்தை பார்க்க. அதில் முறையே
  • அயன் பிணைப்புக்கு ஒரு உதாரணம் NaCl
  • பங்கீட்டு வலுப்பிணைப்புக்கு ஒரு உதாரணம் O2
தரப்பட்டுள்ளது.

அயன் பிணைப்பு
ஒரு அணு தனது இறுதி ஓட்டு இலத்திரனை பூரணமாக இழந்து மற்றைய அணு அந்த இலத்திரனை பூரணமாக ஏற்பதன் மூலம் சடத்துவ நிலையை அடைந்து உருவாகும் பிணைப்பு.

Na யின் இலத்திரன் நிலையமைப்பு 2, 8, 1
Cl யின் இலத்திரன் நிலையமைப்பு 2, 8, 7

Na இறுதி ஓட்டு இலத்திரன் ஒன்றை இழந்து 2, 8 ஆக,
Cl அவ்விலத்திரனை ஏற்று 2, 8, 8 ஆகின்றது.

பங்கீட்டுவலுப்பிணைப்பு
அணுவொன்று தனது இறுதி ஓட்டு இலத்திரன்களை இன்னொரு அணுவின் இறுதி ஓட்டு இலத்திரங்களுடன் பங்கிடுவதன் மூலம் சடத்துவ நிலையை அடைந்து உருவாக்கும் பிணைப்பு.
இது பொதுவாக ஒரே வகையான அணுக்களிடையே நடைபெறும் ஒரு பிணைப்பு.
உதாரணமாக இங்கு தரப்பட்டுள்ள படத்தில் இரு ஒட்சிசன் அணுக்கள் பிணைப்பில் ஈடுபட்டுள்ளன.

இங்கு O இன் இலத்திரன் நிலைமைப்பு 2, 6 ஆகும்.

ஒட்சிசனின் இறுதி ஓட்டை நிரப்புவதற்கு மேலதிகமாக இரு இலத்திரன்கள் தேவை.
ஆகவே இரு அணுக்கள் தம்மிடையே இரு இரு இலத்திரன்களை பங்கிடுவதன் மூலம் பங்கீட்டு வலுப்பிணைப்பை உருவாக்கிக் கொள்கின்றன.
Hope you are enjoying our service!
Make a donation to keep iSr alive!
Last Edit: 4 years 5 months ago by Afdhaal.
The administrator has disabled public write access.

அயன் பிணைப்பு, பங்கீட்டுவலுப்பிணைப்பு விளக்கம்? 1 year 7 months ago #21070

  • Nihila
  • Nihila's Avatar
  • Offline
  • I'm iSr Newbie!
  • Posts: 5
  • Karma: 0
sir please give me a grade 11 tamil medium science kalavai noted
The administrator has disabled public write access.
Time to create page: 0.212 seconds