Welcome, Guest
Username: Password: Remember me
Post here general discussions about university stuffs..

TOPIC: NEET , Anitha மரணம் and இலங்கையின் SAITM

NEET , Anitha மரணம் and இலங்கையின் SAITM 2 months 1 week ago #21780

  • Lanka Students
  • Lanka Students's Avatar
  • Offline
  • I'm iSr Newbie!
  • Posts: 12
  • Thank you received: 2
  • Karma: -8
#அனிதாவின் மரணத்திற்கும் இலங்கையின் சைட்டமிற்கும் என்ன சம்பந்தம் என கேட்கும் புத்தி ஜீவிகளுக்கான பதிவு...
Copied from Aashik Mohamed
#########################
நீட்டும் அனிதாவும் மற்றும் சைட்டம்!
#NEET (National Eligibility and Entrance Test) தேர்வுக்கு பயிற்சிநெறி(course) ஆனது Private கல்வி நிலையத்தாலயே வழங்கப்படுகிறது. அந்த பயிற்சிநெறிக்கு ரூ.8-10 லட்சம் செலுத்த வேண்டும்.
சந்தையில் மூட்டை தூக்கும் கூலித்தொழிலாளி தந்தையின் 5 பிள்ளைகளில் ஒருவரான இம்மாணவி(இவரின் தாய் ஏற்கனவே இறந்து விட்டார்), நாளாந்தம் காய்கறி விற்று தனது படிப்பை பல துயரத்துக்கு மத்தியில் தொடர்ந்து டாக்டர் ஆகும் தனது கனவை அடைய சிறப்பாக படித்து +2 தேர்வில் 1200க்கு 1176 புள்ளிகளை பெற்றார். அதில் #physics; 200/200, #Chemistry 199/200, #Biology;194/200 என அதிஉயர் புள்ளிகள் பெற்று மருத்துவ கல்லூரிக்கு செல்ல தேவையான cutt-offஐ விட அதிகமான புள்ளிகளை எடுத்திருந்தார்.
அந்த ஏழைத் தந்தையால் தனது மகளின் NEET தேர்விற்கான courseஇற்கு தேவையான பணத்தை(ரூ.8 லட்சம்) புரட்ட முடியவில்லை.
எவ்வாறு மடையர்களே!!! அந்த ஏழை தந்தையாலும் மாணவியினாலும் அவ்வளவு பெரிய பணத்தொகயை திரட்ட முடியும்?
ஆகவே அநேகமாக பணக்காரர்களின் பிள்ளைகளினால் மாத்திரம் pass பண்ணக் கூடிய NEET தேர்வில் எந்தவித பயிற்சியும் இல்லாததால் அம்மாணவியினால் சித்தியடைய முடியவில்லை. அவ் ஏழை மாணவி நீதிமன்றம் வரை சென்று போராடினார், யாரய்யா நீதிக்கு நீதி சொல்றானுகள்? எங்கும் பணம்..பணம்..
தனது கனவு தகர்ந்து போக, டாக்டராகி நாடி பார்க்க வேண்டியவள் நாடியே இல்லாது போனால். அந்த மாணவியின் திறமையை விட பணம்தான் அங்கே முக்கியத்துவம் பெற்றது.
இதுக்கும் சைட்டமுக்கும் எப்படி சம்பந்தம்?
(இக்கேள்வியை கேற்கும் அறிவிலிகளே)
திறமையை விட பணம்தான் முக்கியத்துவம் பெறுவதால்தானய்யா சம்பந்தம்.
தனியார் மருத்துவ பீடங்கள் அதிகரிக்கும் போது
அரச மருத்துவ பீடங்கள் கவனிப்பார் அற்றதாகும், புதிய அரச மருத்துவ பீடங்கள் உதிக்காது, அடிக்கல் நாட்டுவதுடன் நின்றிவிடும் (ஏற்கனவே 2 அடிக்கல் நாட்டி பல வருடம் ஆகிறது) ஆகவே எதிர்காலத்தில் ஏழை மாணவன் 3A எடுத்தும் மருத்துவ பீடம் செல்ல முடியாமல் அவனது வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும், அவ்வாறிருக்க
1 கோடி 20லட்சம் இருக்கும் என்ற ஒரே தகுதியிற்காக 3S/2S,W எடுத்தவரெல்லாம் வைத்தியனாவதில் என்னய்யா நியாயம் இக்கு?
அனிதாவிற்கு நடந்த அநீதி மாதிரி எதிர்காலத்தில் இலங்கையிலும் நடைபெறாமலிருக்கட்டும்.
உயிர் பெறுமதிமிக்கது, ஒரு ஏழையின் உயிரும் உயிர்தான்!
கண்ணீர் வடிகிரதய்யா,,,
ஏழையின் ஒரே சொத்தான கல்வியையும் பறித்துவிடாதீர்!

:( :( :( :( :( :( :( :(
www.facebook.com/lankastudent - Useful facebook page for school Students , Undergraduates and Teachers
The administrator has disabled public write access.
Time to create page: 0.065 seconds