ஆவர்த்தன அட்டவணையில் கூட்டம் 17 மூலகங்களுள் Fluorine (F) ஆனது ஏனைய கூட்டம் 17இன் மூலகங்களான Cl,Br,I ஆகியவற்றிலிருந்து முரண்படும் நடத்தைகளை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காண்பிக்கின்றது. 

இவ்வாறான points ஐ exams மற்றும் practice questions இலும் போடுவது வழமை.

At the same time, இதில் students குழம்பிப்போவதும் வழமை. 

So let's summarize those points.

 • Fluorine ஆனது ஏனைய மூலகங்களுடன் ஒப்பிடும்போது பருமனில் மிகவும் சிறிய அணு
  • exceptional features of fluorine/atomic radii
 • கூட்டம் 17 மூலகங்களிலேயே ஒரே ஒரு வலுவளவாக, வலுவளவு 1 ஐ மட்டும் fluorine காட்டுகின்றது.
 • இதே போல -1 ஒட்சியேற்ற நிலையை மட்டுமே காண்பிக்கின்றது.
 • ஏனைய கூட்டம் 17 மூலகங்களுடன் ஒப்பிடும்போது Fluorine ஆனது உயர் மின்னெதிர் இயல்பு உடையது. 
 • ஆனால் கூட்டம் 17மூலகங்களின் இலத்திரன் நாட்டசக்தியை கருதும்போது, அது F>Cl<Br<I எனும் சீரற்ற ஒழுங்கில் அதிகரிக்கின்றது. இங்கு fluorine க்கு அதியுயர் மின்னெதிர்தன்மை உள்ளபடியால் இவ் ஒழுங்கானது, F<Cl<Br<I என வரும் என you may argue now.... ஆனால் இது முற்றிலும் தவறான கருத்து. மின்னெதிர்த் தன்மை, இலத்திரன் நாட்ட சக்தி என்பன இரண்டும் இரு வெவ்வேறு concepts. இங்கு இலத்திரன் நாட்ட சக்தியின் ஒழுங்கில் Fluorine ஆல் ஏற்படும் சீரற்ற தன்மைக்கு reason, Fluorine மிகச்சிறிய அணுவாக இருப்பதால் இதில இலத்திரன் அடர்த்தி உயர்வாக இருப்பதேயாகும். இதனால் இங்கு இலத்திரன் நாட்ட சக்தியில் Cl ஐ விட F க்கு ஒரு இலத்திரனை சேர்க்கும்போது சற்று அதிக சக்தி தேவைப்படுகின்றது. 
  • exceptional features of fluorine/electron affinity
 • அலோகங்களிலே F அதிக தாக்குதிறன் உடைய மூலகமாக உள்ளது. இது கூட்டம் 18 இன் சடத்துவ மூலகங்களான He,Ne,Ar என்பவற்றை தவிர ஏனைய எல்லா மூலகங்களுடனும் தாக்கம்புரியும். Xe உடனும் சேர்வைகளை ஆக்கும்
  • exceptional features of fluorine/reactivity
 • ஏனைய கூட்டம் 17 மூலகங்கள் போலல்லாது Fluorine ஆனது நீருடன் உக்கிரமாக தாக்கம்புரியும். 

2F2 + 2H2O --------> 4HF + O2

3F2 + 3H2O---------> 6HF + O3

 • H2 + F2 --------> HF எனும் தாக்கம் ஏனைய கூட்டம் 17 மூலகங்களிலும் பார்க்க உக்கிரமாக பெருமளவு வெப்பத்தை வெளியிட்டவாறு இருளிலும் நடைபெறக்கூடியதாக உள்ளது.
 • Florine ஒருபோதும் தாழ்த்தியாக தொழிற்படாது
 • NaOH உடன் fluorine இன் தாக்கம் ஏனைய கூட்டம் 17 மூலகங்களின் இருவழிவிகாரத் தாக்கமல்ல.

NaOH+ F2 --------> NaF + OF2 + H2O

 NaOH ஒரு தாழ்த்தியாக தொழிற்படுவது F2 உடனான இத்தாக்கத்தில் மட்டுமே. 

exceptional features of fluorine

    Thanks for reading.....

     Keep sharing and stay tuned with us..

 

Log in to comment

Hsrshini's Avatar
Hsrshini replied the topic: #12630 5 years 6 months ago
ilaththiran naattal shakthii cl > f ????