பிரதானமாக 4 வகையான விலங்கிழையங்கள் உண்டு. அவையாவன,
- நரம்பிழையம்
- தசை இழையம்
- மேலணி இழையம்
- குருதி இழையம்
பின்வரும் படம் இந்த நாங்கு வகையான இழையங்களின் உப பிரிவுகளை காட்டுகின்றது.
1. நரம்பிழையம்
- நரம்புக்கலங்கள் பிரிவடையும் தன்மை அற்றவை.-எமது உடலில் காயங்கள் வருவது உண்டு. அதே போல் அக்காயங்கள் நாளடைவில் ஆரி விடும். காரணம் உடல் கலங்கள் பிரிவடையும் தன்மை கொண்டவை. ஆனால் நரம்புக்கலங்கள் பிரிவடையும் தன்மை அற்றவை. அதாவது, நமது உடலில் உள்ள ஒரு நரம்புக்கலம் சேதமடைந்தாலும் அதனை ஈடு செய்ய முடியாது.
- இயைபாக்கம்-நரம்புக்கலங்களின் தொழில் / தொழிற்பாடு இயைபாக்கத்தை நிகத்துதல் ஆகும். உதாரணமாக, ஒரு நுளம்பு எம் கையை கடிக்கிறது என எடுத்துக்கொள்வோம்.இதன் போது நமது உடலில் நடைபெறும் செயற்பாடுகளை படிமுறையாக பார்ப்பின்,
- நுளம்பு கடிப்பதை உணர்வோம் (தூண்டல்)
- நுளம்பை அகற்றுவதற்கான தொழிற்பாடு வழங்கப்படும், நுளம்பு அகற்றப்படும் (துலங்கள்).
இவ்வாறு தூண்டலுக்கு துலங்கள் வழங்கப்படும் செயற்பாடே இயைபாக்கம் எனப்படும்.
-நரம்பிழையத்தில் பிரதான 3 வகை உண்டு. அவை,
- புலன் நரம்பு
- இயக்க நரம்பு
- இடைதூது நரம்பு / ஈட்ட நரம்பு
மேலும் படங்கள் http://en.wikipedia.org/wiki/Neuron
2. தசை இழையம்
பிரதானம் 3 வகையான தசை இழையங்கள் உண்டு. அவையாவன,
- இதயத் தசை
2. வன்கூட்டுத் தசை / வரித் தசை
3. மழமழப்பான தசை
3. மேலணி இழையம்
விலங்கு இழையங்களில் மேலணி இழையம் ஒன்றாகும். பிரதானமாக 2 வகையான மேலணி இழையங்களை பார்க்கலாம். 1.எளிய மேலணி 2.கூட்டு மேலணி
1.எளிய மேலணி
ஒரு படையில் மாத்திரம் கலங்களை கொண்ட மேலணி இழையம் எளிய மேலணி இழையம் எனப்படும். எளிய மேலணி இழையம் 5 வகைப்படும்.
- செதில் மேலணி
- கனவடிவ / செவ்வகத்திண்ம மேலணி
- கம்ப மேலணி
- பிசிர் மேலணி
- போலிப்படை மேலணி
செதில் மேலணி
- இயல்புகள்- மெல்லிய, தட்டையான கலங்களால் ஆனது.
- தொழில் -பதார்த்தங்களை இலகுவாக கடத்துவதில் அல்லது பரிமாற்றுவதில் உதவுதல்.
- அமைவிடம் - சிறுநீரகத்தியின் போமனின் உரை, சுவாசப்பை சிற்றறைகள், குருதி மயிர்குழாய் சுவர்கள்.
கனவடிவ மேலணி அல்லது செவ்வகத் திண்ம மேலணி:-
- இயல்புகள் - கலங்கள் கணவடிவானவை.
- தொழில்- சுரத்தல், அகத்துறிஞ்சல்.
- அமைவிடம்- சிருநீரகத்தியின் அண்மையான மடிந்த சிறுகுழாய், அநேகமான சுரப்பிகளின் கான்கள்.
கம்ப மேலணி:-
- இயல்புகள்- கலங்கள் செவ்வக வடிவானவை.
- தொழில்- அகத்துறிஞ்சல்
- அமைவிடம்- இரைப்பை மேலணி, சிறுகுடல் மேலணி, சுவாசச் சிறு குழாய்கள்
போலிப்படை கொண்ட மேலணி:-
- இயல்புகள்-கலங்கள் ஒரு படையில் அடுக்கப்பட்டிருப்பினும் பல படைகளில் உள்ளதைப்போன்று தோற்றமளிக்கும்.
- அமைவிடம்- சிறுநீர்க் குழாய்
பிசிர் மேலணி:-
- இயல்புகள்- செவ்வக வடிவான கலங்கள். கலங்களின் மேற்பரப்பில் பிசிர்கள் காணப்படும்.
- தொழில்- தூசு துணிக்கைகளை வடித்தல்
- அமைவிடம்- வாதனாளி
2.கூட்டு மேலணி:-
கூட்டு மேலனியில் கலங்கள் பல படைகளில் காணப்படும். இதில் பிரதானமாக இரண்டு வகை உண்டு.
- படைகொண்ட மேலணி
- நிலை மாறுகின்ற மேலணி
படைகொண்ட மேலணி
- தொழில்- பாதுகாப்பு
- அமைவிடம்- தோல், வாய்க்குழி, தொண்டை
நிலை மாறும் மேலணி
- தொழில்- இழுவைக்கு ஈடு கொடுத்தல்
- அமைவிடம்- சிறுநீர்ப் பை, சிறுநீரக இடுப்பு.