•  இரசாயனப் பதார்த்ங்களில் அடங்கியுள்ள சக்தி இரசாயனச் சக்தி எனப்படும்
 • இரசாயன மாற்றம் ஏற்படும் போது இரசாயன சக்தியில் மாற்றம்  ஏற்படும். அதாவது, ஒன்று or அதற்கு மேற்பட்ட இரசாயனப் பதார்த்தங்கள் இரசாயனத் தாக்கத்திற்குள்ளாகி வேறு இரசாயனப் பதார்த்தங்களை உருவாக்கும்போது சக்தி மாற்றம் நடைபெறும். 
 • வெப்பத்தின அடிப்படையில் இரசாயனத் தாக்கங்களை 2 வகையாக்கலாம்
 1. அகவெப்பத் தாக்கம்
 2. புறவெப்பத் தாக்கம்

அகவெப்பத் தாக்கம்

 • இரசாயன மாற்றம் நிகழ்கின்றபோது இரசாயனத் தொகுதி சூழலிலிருந்து வெப்பத்தை அகத்துறிஞ்சுமாயின் அது அகவெப்பத்தாக்கமாகும்.
 • அகவெப்பத் தாக்கத்தின் போது தாக்கத் தொகுதியின் வெப்பநிலை குறைவடையும்.
 • endothermic reaction for GCE O level Srilanka
 • Eg:
 1. CuSO4 பளிங்கை நீரில் கரைத்தல்
 2. Glucoseஐ நீரில் கரைத்தல்
 3. Ureaஐ நீரில் கரைத்தல்
 4. ஒளித்தொகுப்புத் தாக்கம்
 5. NH4 (அமோனியா) சம்பந்தப்பட்ட எந்தவொரு சேர்வையையும் நீரில் கரைத்தல்.

புறவெப்பத் தாக்கம்

 • இரசாயன மாற்றமொன்று நிகழும்போது இரசாயனத் தொகுதியிலிருந்து சூழலுக்கு வெப்பம் இழக்கப்படுமானால் புறவெப்பத் தாக்கமாகும்
 • இவை இரசாயனத் தொகுதியின் வெப்பநிலை உயர்வுடன் நடைபெறும் தாக்கங்களாகும். 
 • exothermic reaction for GCE O level Srilanka
 • Eg:
 1. K, Na ஆகிய உலோகங்களை நீரில் கரைத்தல்
 2. Mg,Zn ஆகிய உலோகங்களை வளியில் வெப்பமேற்றல்
 3. அமிலங்களும் காரங்களும் சேர்ந்து உருவாகும் நடுநிலையாக்கல் தாக்கங்கள். 
 4. கலச்சுவாசம்
 5. ஒற்றை இடப்பெயர்ச்சித் தாக்கங்கள்

புறவெப்பத்தாக்கங்களின் சக்திமாற்றம் -Q எனவும் அகவெப்பத்தாக்கங்களின் சக்திமாற்றம் +Q எனவும் குறிக்கப்படும்.

அதாவது இரசாயனத் தாக்கமொன்றின் போது ஏற்படும் சக்தி மாற்றப் பெறுமானம் (-) ஆயின் புறவெப்பத்தாக்கமாகும், (+) ஆயின் அகவெப்பத்தாக்கமாகும்.  

Log in to comment

Thenu 's Avatar
Thenu replied the topic: #16867 4 years 10 months ago
அம்ஹர் replied the topic: #16840 4 years 10 months ago
தயவு செய்து தாக்க வீதத் தொடரை சொல்ல முடியுமா?