• சுற்றாடலில் சக்தி ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குக் கடத்தப்படுவது அலையியக்கம் மூலமாகும்.

உ-ம் : ஒளி, ஒலி, வெப்பம், சுனாமி, விண்வெளி ஓடங்களில் இருந்து புவியை வந்தடையும் தகவல்கள்.........

 • அலைகள் பிரதானமாக இரு வகைப்படும்.

1. பொறிமுறை அலைகள்.

2. மின்காந்த அலைகள்.

 

பொறிமுறை அலைகள்

 • இவ் அலைகள் கடத்தப்படுவதற்கு ஊடகம் அவசியமாகும்.
 • அலைகள் ஊடகத்தினூடாக கடத்தப்படும் போது அவ் ஊடகத்துணிக்கைகள் ஒரு நிலையான புள்ளி பற்றி மேல் கீழாக அல்லது முன் பின்னாக ஆவர்த்தண அசைவைக் காட்டுகின்றன.
 • எனினும் இங்கு ஊடகத் துணிக்கைகள் இடம்பெயர்வதில்லை. ஒரு துணிக்கை அதிரும் போது மறு துணிக்கைக்கு சக்தியை வழங்குவதால், அலை செல்லும் திசையில் சக்தி கடத்தப்படுகின்றது.
 • அதிர்வினை அடிப்படையாகக் கொண்டு பொறிமுறை அலைகள்  2 வகைப்படுத்தப்படும்.

1. குறுக்கு அலைகள்

2. நெட்டாங்கு அலைகள்

 

 • அலை ஒன்றின் பிரதான பகுதிகள்

noise-canceling-headphone-7

 

Longitudinal-Wave1  


அலைநீளம் (wavelength)
 : ஒரு அலையியக்கத்தில் அடுத்துள்ள ஒரே நிலையிலுள்ள இரு தானங்களுக்கு இடையே உள்ள தூரம் அலைநீளம்  

   எனப்படும். அலகு - மீற்றர் (m)

வீச்சம் (Amplitude)             :ஒரு அலையியக்கத்தில் ஒரு துணிக்கை அதன் ஆரம்ப நிலையில் இருந்து ஒரு திசையில் அடையும் உச்ச

            இடப்பெயர்ச்சி வீச்சம் ஆகும். அலகு - மீற்றர் (m)

குறுக்கு அலைகள் (Transverse waves)

 • அலை செல்லும் திசைக்கு செங்குத்தாக அவ் ஊடகத் துணிக்கைகள் அதிருமானால், அவ்வலை குறுக்கலை எனப்படும்.

உ-ம் : -அமைதியான நீர்ப்பரப்பில் சிறு கல்லினை இடும்போது அங்கு ஏற்படும் குழப்பங்கள்.

water wave                          water

            -ஒரு முனையில் நிலையாகக் கட்டிய கயிறு அல்லது சிலிங்கியின் மறுமுனையை மேல் கீழாக அசைக்கும்போது தோன்றும் அலை.

 ESCI098ENEWAV002

 -ஒளி அலை.

 

 • குறுக்கலை எவ்வாறு தோன்றுகிறது?

 

நீர்ப்பரப்பில் கல் ஒன்றை இடும்போது ஏற்படும் குழப்பங்களைக் கருதுவோம்...... அங்கு என்ன நடைபெறுகிறது??

images

கல் ஏற்படுத்தும் அமுக்கம் காரணமாக நீர் மேற்பரப்பு கீழிறங்கி ஒரு தாழியை (trough) உருவாக்கும்.

அதன் மறுதாக்கம் மற்றும் மூலக்கூற்றிடைக் கவர்ச்சி ஆகியவற்றால், தாழியைச் சூழவுள்ள நீர் மேலெழுந்து இரு புறமும் முடிகளை (crest) உருவாக்கும்.

இப்போது தாழியிலும், முடியிலும் உள்ள நீரின் அமுக்க வேறுபாடு காரணமாக நீர்ப்பரப்பு தன் ஆரம்ப நிலைக்கு வர எத்தனிக்கும்.

அவ்வாறு வர முயலுகையில் முடியாக இருந்த நீர்ப்பரப்பு ஓய்வுத்தானத்தைக் கடந்து தாழியாகவும், தாழி முடியாகவும் மாறும்.

இவ்வாறு ஏற்பட்ட குழப்பம் தாழியாகவும், முடியாகவும் தொடர்ந்து பரவிச்செல்லும்.

 

நீள்பக்க அலைகள் (நெட்டாங்கு அலைகள்) - (Longitudinal waves)

 

 • அலையியக்கத்தின் போது அவ் ஊடகத்துணிக்கைகள் அலை செல்லும் திசையில் அதிருமானால் அவை நீள்பக்க அலைகள் எனப்படும்.

உ-ம் : -ஒரு முனையில் கட்டிய சிலிங்கியின்  சுயாதீன முனையை முன் பின்னாக இழுக்கும் போது சிலிங்கியில் உருவாகும் அலை.

P8C2 clip image004

 -இசைக்கவர் அல்லது வாள் அலகு அதிரும் போது வளியில் உருவாகும் அலை.

longitudinal-waves-rarefaction                                     SOUND LONGITUDINAL WAVES 01

 

- ஒலி அலை

long waves

 • நீள்பக்க அலை எவ்வாறு தோன்றுகிறது?

 sound.longitudinal waves

இதற்காக வளியில் அதிரும் வாள் அலகு அல்லது இசைக்கவர் ஒன்றைக் கருதுவோம்....

இசைக்கவர் ஒரு நிலைத்த புள்ளியில் இருந்து ஒரு திசையில் அசையும் போது அடுத்துள்ள வளித்துணிக்கைகள் நெருக்கப்பட்டு செறிவாகும். இது நெருக்கல் (condensation) எனப்படும்.

தொடர்ந்து இசைக்கவர் முன்னர் அசைந்த திசைக்கு எதிர்த்திசையில் அசையும் போது வளித்துணிக்கைகளுக்கு இடையே இடைவெளி அதிகரித்து துணிக்கைகள் ஐதாகும். இது ஐதாக்கல் (rarefaction) எனப்படும்.

இவ்வாறாக இசைக்கவர் ஒரு நிலைத்த புள்ளி பற்றி அதிரும் போது நெருக்கலும், ஐதாக்கலும் மாறி மாறித் தோன்றுவதன் மூலம் வளிப்படையினூடு சக்தி கடத்தப்படுகிறது.

 


 

 துரித மீட்டல் குறிப்புகள்

 

 • அலைகள் சக்தியைக் கடத்துகின்றன.
 • இரு வகை, 1. பொறிமுறை அலை    2. மின்காந்த அலை
 • பொறிமுறை அலைகள் கடத்தப்படுவதற்கு ஊடகம் அவசியமாகும், ஊடகத் துணிக்கைகள் இடம்பெயர்வதில்லை, அலை செல்லும் திசையில் சக்தி கடத்தப்படுகின்றது.
 • பொறிமுறை அலைகள்  2 வகை,   1. குறுக்கு அலைகள்       2. நெட்டாங்கு அலைகள்
 • அலை செல்லும் திசைக்கு செங்குத்தாக ஊடகத் துணிக்கைகள் அதிரல் குறுக்கலை. தாழி, முடி தோன்றும். உ-ம்: ஒளி அலை.
 •  ஊடகத்துணிக்கைகள் அலை செல்லும் திசையில் அதிரல் நீள்பக்க அலை. நெருக்கல், ஐதாக்கல். உ-ம்: ஒலி அலை.

 

 THANK YOU !

Please share your comments. Your comments will help us to provide more useful things !

Log in to comment