எம் அன்றாட வாழ்கையில் "ஒலி" ஒரு பெரும் பங்கை வகிக்கின்றது. எமது குரல்வளையிலுள்ள குரல் நாண் ஒரு ஒலியை உருவாக்கும் பகுதியாகும் என்பதை நீர் அறிவீர்கள் என நினைக்கிறேன். அதை பற்றி பின்னால் விரிவாகக் கூறுகிறேன்.

 • அலைகள் இருவகைப்படும். அவை,
  1. மின்காந்த அலை
  2. பொறிமுறை அலை
 • பொறிமுறை அலை இருவகைப்படும். 
  1. குறுக்கலை (Transverse wave)
  2. நெட்டாங்கு அலை (Longitudinal wave)
         அவை கீழ்வரும் படத்தில் காட்டப்பட்டுள்ளன.

longitudinal wave n transverse wave

 • ஒலி ஒரு நெட்டாங்கு அலையாகும். அதாவது ஒலியானது வளியை நெட்டாங்காக அதிரச் செய்வதன் மூலம் கடத்தப்படுகிறது.

longitudinal wave demonstrationநெட்டாங்கு அலை

 • வளியில் ஒலியின் வேகம் 330ms-1 ஆகும். இந்த வேகம் வளியை விட திரவத்தில் கூட; அதைவிட திண்மத்தில் கூட.
  அலையின் வேகத்தை காண்பதற்குப் பயன் படுத்தும் சமன்பாடான பின்வரும் சமன்பாட்டை ஒலியின் வேகத்தை கணிக்கவும் பயன்படுத்தலாம்.

V = f λ

V - அலை வேகம்
f  - அலை மீடிறன்
λ - அலை நீளம்

Q1. மீடிறன் 165Hz ஐ உடைய ஒலி முதல் ஒன்று இயக்கப் படுகின்றது. அதன் அலை நீளத்தை காண்க. (வளியில் ஒலியின் வேகம் 330ms-1)

இந்த கேள்வியை நீங்களே செய்து பார்க்கவும்.
விடை λ = 2m

 • ஒலிக்கு பின்வரும் சிறப்பியல்புகள் உண்டு. சிறப்பியல்புகளும் அவை சார்ந்த கணியங்களும்.
 • சுருதி - மீடிறன் (f)
 • உரப்பு - வீச்சு
 • ஒலியின் பண்பு - அலைவடிவம்
 • ஒலி தெறிப்படைய்யக் கூடியது. ஒரு மேற்பரப்பில் ஒலி படும் போது தெறிப்புக்குள்ளாகும். (ஒரு பந்து மேற்பரபொன்றில் தெறிப்பது போல). இதன் விளைவாகவே எதிரொலி உருவாகும். பின்வரும் படத்தில் பச்சை நிர தொடர் கோட்டு அம்புக்குறி அலை செல்லும் பாதையை காட்டுகின்றது.

sound circular waves

எவ்வாறு ஒளியை உற்பத்தி செய்வது?

ஒலியை உற்பத்தி செய்ய பின்வரும் வழி முறைகளை பயன்படுத்தலாம். இந்த வழிமுறைகளே இசைக் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

 1. ஈர்க்கப்பட்ட இழையை அதிரச்செய்தல்.
  Eg: Gitar, violin
  இழையின் அதிர்வு மீடிறன் அதன் இழுவை மற்றும் அதன் தன்மையில் தங்கியுள்ளது.

 2. ஈர்க்கப்பட்ட சவ்வை அதிரச்செய்தல்.
  Eg: தபேளா, ரபான்

  எமது குரல்வளையிலுள்ள குரல் நாண் ஒரு ஈர்க்கப்பட்ட சவ்வு போன்ற அமைப்பாகும். நாம் கதைக்கும் போது அந்த சவ்வு அதிர்வதனாலேயே குரல் எனும் ஒலி உருவாகின்றது.

 3. வளி நிரலொன்றை அதிரச்செய்தல்.
  Eg: புல்லாங்குழல்

 பின்வரும் பரிசோதனையை நீங்களே செய்து பாருங்கள்.

waves string tension and soundஒரு இழை, சில திணிவுகளையும் எடுத்து பின்வருமாறு உருவை அமைத்துக் கொள்ளவும். பின் வெவ்வேறு திணிவுகளுக்கு/ இழையின் இழுவைகளுக்கு இழையின் நடுவே தட்டி அதிரச் செய்யவும். வெவ்வேறு இழையின் இலுவைக்ளுக்கு வெவ்வேறு அதிர்வு மீடிறன்கள் பெறப்படுவதை அவதானிப்பீர்கள்.

Sharing is caring. Feel free to Like & Share.

Log in to comment