பேணூயீயின் தத்துவம். Explaination with video..
Defn:- பாகுநிலை அற்றதும் நெருக்கற் தகவற்றதுமான பாயி ஒன்று உறுதிப் பாய்ச்சலில் பாயும் போது அருவிக்கோட்டில் உள்ள ஏதாவது ஒரு புள்ளியில் அமுக்கத்தினதும் அலகுக் கனவளவிற்கான இயக்கசக்திஅழுத்தசக்தியினதும் கூட்டுத் தொகை ஓர் மாறிலியாகும்.

நெருக்கற் தகவற்ற பாயி  என்றால் என்ன?

அமுக்க மாற்றத்தின் போது அடர்த்தி மாற்றம் நிகழாத பாயிகள் நெருக்கற் தகவற்ற பாயிகள் எனப்படும்.

பாகுநிலையற்ற பாயி  என்றால் என்ன? 

பாயியின் அடுத்துள்ள படைகளுக்கிடையில் உராய்வு விசை இல்லை எனின் அவை பாகுநிலையற்ற பாயிகள் ஆகும்.

உறுதிப் பாய்ச்சல் என்றால் என்ன?

ஏதாவது ஒரு புள்ளியை கடக்கும் பாயியின் மூலக்கூறுகளின் வேகத்தின் பருமனும் திசையும் நேரத்துடன் மாறாமல் இருப்பின் அப்பாய்ச்சல் உறுதிப் பாய்ச்சல் எனப்படும்.

சமன்பாட்டு வடிவம்

P + ½Ƿv2 + Ƿgh = K

P1 + ½Ƿv12 + Ƿgh= P2 + ½Ƿv22 + Ƿgh2

P – அமுக்கம்

½Ƿv2 - அலகுக் கனவளவிற்கான இயக்கசக்தி

Ƿgh - அலகுக் கனவளவிற்கான  அழுத்தசக்தி

K – மாறிலி


தொடர்ச்சிக்கான சமன்பாடு

பாயி உறுதியாக பாய்கிறது

(1) இற்கூடான பாய்ச்சல்வீதம் = (2) இற்கூடான பாய்ச்சல்வீதம்

v1/t = v2/t

{v1= A1.l1 , v2=A2.l2 }

A1.(l1/t) = A2.(l2/t) 

 { but l1/t = V1 , l2/t = V2 }

A1.V1 = A2.V2

AV = K (மாறிலி)

(small)v1,vபாயியின் கனவளவுகள்

A1 , Aகுறுக்குவெட்டுப்பரப்பளவுகள்

 V1 , V2 - வேகம்

 

பேணூயீயின் தத்துவத்தின் பிரயோகங்கள்

1.Carburettor

பெற்றோல் தாங்கியில் இருந்து வரும் பெற்றோல் Carburettor னுள் சிறிய ஒரு துவாரத்தினுடாக வெளிப்படும் எனவே அவ்விடத்தில் பெற்றோலின் கதி கூடவாக இருக்கும் எனவே அவ்விடத்தில் அமுக்கக் குறைவொன்று ஏற்பட அவ்விடத்தை நோக்கி வெளியில் உள்ள வளி உட்புகும் இதனுடாக engine க்கு தேவையான பெற்றோல் + வளிக்கலவை பெறப்படும். 

{youtube}9BYm0HnLGRU{/youtube}

http://www.youtube.com/watch?v=9BYm0HnLGRU

2.விமானம் மேல் எழுதல்

விமானமொன்றின் இறக்கைகளின் மேலாக வளியனது கூடிய கதியுடனும்  இறக்கைகளின் கிழாக வளியனது குறைந்த கதியுடனும் இயங்குகிறது. இதனால் இறக்கைகளின் மேல் உள்ள வளியின் அமுக்கதைவிட  இறக்கைகளின் கிழாக உள்ள அமுக்கம் கூடவாக இருக்கும் இதனால் விமானத்தின் இறக்கைகளின் மீது மேல்நோக்கி ஒரு விளையுள் விசை தொழிற்படும். இதுவே விமானம் மேலெழுவதற்கு தேவையான உயர்த்தும் விசையைக் கொடுக்கிறது.

{youtube} bv3m57u6ViE{/youtube}

http://www.youtube.com/watch?v=bv3m57u6ViE

3.Spin Ball

பந்து வீசப்படும் போது சுழற்றி வீசப்படுவதால் பந்தினது ஒரு பக்கத்தில் வளியின் கதி கூடவாக இருக்கும். இதன் காரணமாக ஒரு பக்கத்தில் அமுக்கம் கூடவாகவும் மற்றைய பக்கத்தில் அமுக்கம் குறைவாகவும் இருக்கும்.இதனால் பந்தின் மீது பக்கவாட்டிலும் ஒரு விசை தாக்கும் எனவே பந்து வளியில் செல்லும் போதே பக்கவாட்டாக வளைகிறது.

4.Pitot Static Tube

பேணூயீயின் தத்துவப்படி,

P + ½Ƿv2 = K

Z  எனும் மட்டம் பூச்சிய அழுத்சக்தி மட்டமாக கொள்ளப்படுவதால் அலகுக் கனவளவிற்கான அழுத்தசக்தி பூச்சியமாகும்.

P1 + ½Ƿv2 = P2

Π + h1Ƿg + ½Ƿv2 = Π + h2Ƿg

Π - வளிமண்டல அமுக்கம்

½Ƿv2 = h2g - h1g

V = {2g (h– h1)}1/2

பீற்றோ குழாயை பயன்படுத்தி பாயிக்களின் வேகத்தை துணியலாம்.

 5. Venturi meter

திரவங்கள் பாயும் பாய்ச்சல் வீதங்கள்(Q) சமன் என்பதால்

Q = A1.V1 = A2.V2

V= Q/A, V2 = Q/A2

(தொடர்ச்சிக்கான சமன்பாட்டை நினைவு கூறுங்கள்) 

பேணூயீயின் தத்துவப்படி

P + ½ǷV2 = K

P1 + ½ǷV1= P2 + ½ǷV22

Π + h1Ƿg + ½Ƿ(Q/A1)2 = Π + h2Ƿg + ½Ƿ(Q/A2)2

(h1-h2)Ƿg = ½ǷQ{1/A22 – 1/A12}

2g(h1-h2) =Q2{A12-A22/ A12. A22}

Q2 = A12. A22 {2g(h1-h2)/ A12-A22}

Q = A1.A2 {2g(h1-h2)/ A12-A22}1/2

A1,A2,h1,h2 என்பன தெரியுமாயின் பாயின் பாய்ச்சல் வீதம்  வைத் துணியலாம் .