time? time? time? !!!
கல்வி கற்கும் காலத்தில் மாணவர்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டிய விடயங்களில் நேர முகாமைத்துவமும் ஒன்றாகும். இன்று நேரமின்மை மாணவர்கள் மத்தியிலுள்ள பெரும் பிரச்சினையாகும். இதற்கான தீர்வுகளில் ஒன்றாக நேர அட்டவணையைப் பயன்படுத்தலாம் என நம்புகிறேன்.
நேர அட்டவணைப் படி கற்பதன் பயன்களுள் சில ..........
- நேர முகாமைத்துவத்திற்கான பயிற்சி கிடைக்கும்.
- எல்லாப் பாடங்களையும் அதற்குரிய முக்கியத்துவத்தை வழங்கி உரிய நேரத்தில் கற்று முடிக்கலாம். பரீட்சைக்கு முன் ஒரு பாடம் படிக்கவில்லையே என்ற பிரச்சினையெல்லாம் வராது!
- பரீட்சைக்கான தயார்படுத்தலில் குழப்பம், பயம் இருக்காது.
- போதியளவு ஓய்வு கிடைக்கும். எனவே உடல், உள ஆரோக்கியம் பேணப்படும்.
- எந்த நேரத்தில் எதைப்படிப்பது? ஒரு பாடத்தைப் படிக்கும் போது வேறு ஒரு பாடம் பற்றிய பயம், குழப்பம் போன்றவற்றை இல்லாமல் செய்ய முடியும்.
- சரியான திட்டமிடல் ஒரு வேலையின் பாதியைச் செய்து முடிப்பதற்கு சமமாகும்.
நேர அட்டவணையை தயாரிக்கும் கவனிக்க வேண்டியவை
- அடைய முடியாத இலக்குகளை தீர்மானிக்க கூடாது. உதாரணமாக, இன்றுடன் முழுப்பாடத்தையும் கற்று முடித்தல் போன்று.
- மிக அதிக நேரத்தை கற்றலுக்காக பயன்படுத்தக் கூடாது.
- ஓய்வு, இதர வேலைகளுக்கும் நேரத்தை ஒதுக்க வேண்டும்.
- நேர அட்டவணையை முற்றாக பின்பற்ற வேண்டும்.
- விடுபட்ட வேலைகளை வேறாக திட்டமிட்டு செய்து முடிக்க வேண்டும்.
நேர அட்டவணையை அமைத்துக்கொள்ள பல வழிமுறைகள் உள்ளன. அவற்றுள் நான் பயன்படுத்திய வழிமுறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
- முதலில் உங்கள் வசதிக்கு ஏற்றவாறு ஒரு பாடவேளைக்கான நேரத்தை தீர்மானித்துக் கொள்ளவும். உதாரணமாக 40 நிமிடங்கள் சிறந்தது.
- தூங்கும் நேரத்தைக் கழித்து ஏனைய நேரத்தை மேற்படி பாடவேளைகளாக பிரித்துக் கொள்க. 11.00 p.m - 5.00 a.m வரை தூங்குவதென்றால்......
5.00 - 5.40
5.40 - 6.20 என்றவாறு....
இதன் போது ஓய்வுக்குரிய நேரங்களை தேவைக்கேற்ப குறைத்துக் கொள்ளுங்கள்.
- இனி நேரம், நாள் ஆகியவற்றைக் கொண்ட அட்டவணை ஒன்றைத் தயாரித்துக் கொள்க.
- பாடசாலை நேரம், மேலதிக வகுப்புகள், வணக்கவழிபாடுகள், சாப்பாடு, தொலைக்காட்சி, பத்திரிகை, குட்டித்தூக்கம், ஓய்வு....... போன்றவற்றிற்குரிய பகுதிகளை அடடவணையில் நிழற்றிக் கொள்க.
- அட்டவணையில் எஞ்சியுள்ள பெட்டிகளை கணக்கிடுக. (உதாரணமாக 70 பெட்டிகள்)
- உங்கள் பாடங்களை முக்கியத்துவ ஒழுங்கில் ஒரு தாளில் எழுதுக.இவ்வொழுங்கு பாடப்பரப்பின் அளவு, கடினத்தன்மை போன்றவற்றால் தீர்மானிக்கப்படலாம்.
- பின் நீங்கள் கணக்கிட்ட பெட்டிகளை முக்கியத்துவத்தின் அடிப்படையில் பிரித்துக் கொள்க. உதாரணமாக,
Maths - 10 பெட்டிகள்
Science - 10 பெட்டிகள்
English - 08 பெட்டிகள்
History - 09 பெட்டிகள்
- இனி உங்களுக்கு ஏற்ற நேரத்தில் பாடங்களை இட்டு பெட்டிகளைப் நிரப்பிக் கொள்க.
சரியான திட்டமிடல் ஒரு வேலையின் பாதியைச் செய்து முடிப்பதற்கு சமமாகும்.