thumb dep_6968214-Time-to-face-the-problemதர்க்க ரீதியாக கேள்விகளை,பிரச்சினைகளை எவ்வாறு கையாள வேண்டும்......


        question markman-blue    "தர்க்கம்" என்பது ஓர் ஆய்வுக்குறிய சொல். "தர்க்கம்" என்று சொல்லும்  போதே மறு கணம் மனதில் எழுவது ஆய்வு செய்தலுக்கான  உள எழுச்சியே.  ஆனாலும் தர்க்க ரீதியாக பிரச்சினைகளை , சவால்களை அணுகுதல் என்பது  பலர் மனங்கொண்டு  விரும்பாத ஒரு செயலாக இன்று மாறியுள்ளது. ஆனால் நவீன காலத்தில் " தர்க்க ரீதியான சிந்தனை போக்கு " என்பது தொழில் சார் முகாமைத்துவ மற்றும் ஆய்வுத்துறைகளில் இன்றி அமையாத ஒன்றாகியுள்ளது.


 தர்க்க ரீதியாக கேள்விகளை . பிரச்சினைகளை முகங்கொடுப்பதற்காகவும் அதன் முக்கியத்துவத்தை உணர்வதற்காகவும் , நவீன கற்கை முறைகள் , தர்க்க ரீதியாக அணுகக் கூடிய கேள்விகளை முன் வைக்கின்றன. மேற்கத்தேய கல்வி முறைமைகள் இதை மிக நீண்ட காலத்துக்கு முன்னதாகவே தம் மாணவர்சமூகம் மத்தியில் அறிமுகப் படித்தியிருந்தாலும் இலங்கை கல்வி முறைமைகள் மிக சொற்ப காலத்துக்கு முன்னிலிருந்தே தான் இத்தகைய கேள்விகளை பரீட்சை தாள்களில் பிரசுரிப்பதில் கூடிய கவனம் செலுத்தியுள்ளன. இதன் விளைவாக இன்று நம் சகோதர மாணவர் சமூகம்  அதிகமாக தடுமாறும், அதிகமாக வெறுக்கக் கூடிய கேள்வி வகைகளாக இவற்றை இனங் காணலாம்.


                                  tips and tricks to face the problem   தர்க்க ரீதியாக கேற்கக் கூடிய கேள்விகளின் வகைகள், அவற்றை அனுகுவது எப்படி எனபதை ஆராயதை விட இக்கட்டுரையின் நோக்கம் , உங்கள் மனதில் தர்க்க ரீதியான சிந்தனா போக்கை எவ்வாற் ஊற்றெடுக்க செய்வதென்பதாகும். சாதாரமாக மனிதர்களின் சிந்தனைத் திறன் , ஒவ்வொருவருக்கும் இடையில் வேறுபட்டது. சிலரோ மிக வேகமாக , நுணுக்கமான கேள்விகளுக்கும் விடை அளிக்கக் கூடிய தன்மை உடையவர்களாக உள்ளனர். இன்னும் சிலரோ அங்ஙனம் இல்லாது மெதுவாக மிக நீண்ட நேரம் எடுத்து பிரசினங்களை தீர்ப்பர். ஆனால் கவனிக்கப்பட வேண்டியது யாதெனில் உலகில் யாருமே தர்க்க ரீதியான சிந்தனை போக்கு அற்றவர்கள் என்று இல்லை. மந்த புத்தி யுள்ளவர்கள் கூட சில விடயங்களில் தர்க்க முறைமைகளை கைக்கொள்வர். ஆக எல்லோருக்கும் இருக்கும் , ஆனாலும் பல்வேறு பட்ட தரத்தில் இருக்கும் ஒரு ஆளுமை தான் தர்க்க ரீதியான சிந்தனை என்பது.


                                 இந்நிலையில் , நமக்கு ஒரு கேள்வி எழலாம், அதாவது நாம் தர்க்க ரீதியாக சிந்திப்பதில் எத்தரத்தில் உள்ளோம் என்ற கேள்வி. இது மிகவும் ஆழமாக சிந்திக்க பட வேண்டிய ஒன்றாகும். இதனை அறிந்து கொள்வதற்கு மிகச் சிறந்த வழி, நாம் நம் பழைய நினைவுகளை அலசிப்பார்ப்பதே. உங்களுடைய ப‌ழைய நினைவுகளில் , நீங்கள் பல நூறு பிரச்சினைகளை சந்திதிருக்கலாம். அவை சில நேரம் நன்கு நினைவிலும் இருக்கலாம். அத்தகைய ஓரிரு பிரச்சினைகளை சற்று யாபகப் படுத்துன்ங்கள். அவற்றினூடாக உங்கள் நிலைப்பாட்டை யோசியுங்கள். இதன் போது , அந்த பிரச்சினையின் தன்மை , அப்பிரச்சினைக்கு நீங்கள் கொடுத்த தீர்வு , நீங்கள்முகங் கொடுத்த விதம், அதற்காக எடுத்த  நேரம் , என்பவை பற்றியெல்லாம் யோசியுங்கள். அந்த பிரச்சினைக்கும் அதன் தீர்வு கிடப்பதற்கும் செல விடப்பட்ட கால அவகாசம் உங்களை திருப்தி படுத்தும்  அல்லது திருப்தி படுத்தாத தன்மையினைக் கொண்டு நீங்களே உங்கள் தர்க்க ரீதியாக பிரசினைகளை அனுகும் திறனினை முடுவு செய்து கொள்ளலாம். இம் முறைமை ஒரு அங்கீகாரம் பெறப்பட்ட ஒன்றாக இல்லா விடினும் அடிப்படை தரவுகளை , தன்னைப் பற்றிய முடிவுகளை இலகுவாக பெற வாய்ப்பளிக்கும்.


                             tips and tricks to face the problem    இங்கனம் உங்களை பற்றி நீங்களே முடிவு செய்த பின் , நீங்கள் பல வகைகளுக்குள் அடங்குபவராகக் காணப்படலாம். உதாரணமாக

  1. தர்க்க ரீதியாக பிரசினைகளை அணுக ஆர்வமற்றவர்கள்
  2. தர்க்க ரீதியாக சிந்திக்கும் ஆர்வம் இருந்தும் அதனை உபயோகிக்காதவர்கள்.
  3. தர்க்க ரீதியாக பிரசினங்களை அணுகினும் அதிகம் , முடிவெடுப்பதில் பிழைப்பவர்கள்.
  4. தர்க்க ரீதியாக பிரசினங்களை அணுகுதல் ஓர் நேர  வீணடிப்பு என எண்ணுபவர்கள்.

இதுவரையில் தர்க்க ரீதியாக உலகத்தை பார்க்காதவர்கள் (?)


                                இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும் நீங்கள் எத்தகைய வகைக்கு உரியவராக இருப்பினும், நிச்சயமாக தர்க்க ரீதியான சிந்தனை போக்கு உங்களுக்கு எல்லா விதத்திலும் நலனையே சேர்க்கும்.
                    stock-photo-9440345-problem-solving                                                                                   

  ( தொடரும்)