stock-illustration-14084971-group-study-bookgood? or bad?

குழுவாகக் கற்றல் என்பது இன்று வினைத்திறனான கற்றல் முறைகளுள் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வுகளின் அடிப்படையிலும் குழுவாகக் கற்கும் மாணவர்களின் அடைவுமட்டம் உயர்வாக இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. எனினும் குழு ஊக்கமானது மாணவர்களை தவறான வழிக்கும் இட்டுச்செல்வதை நாம் காண்கிறோம். எனவே குழுவாகக் கற்றலின் முழுப்பயனை அடைந்துகொள்ளும் பொறுப்பு மாணவர்களுடையதே! அந்த வகையில் குழுவாகக் கற்றலின் சில பண்புகளை ஆராய்வோம்......

குழுவாகக் கற்றலின் பயன்கள் என்ன?

1. கற்றலுக்கான சூழலை உருவாக்கிக் கொள்ளலாம். கற்றலுக்கான உரிய சூழல் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. எனவே கற்றலுக்கேற்ற சூழல்   கிடைக்கும் போது ஓர் ஆர்வம் ஏற்படும்.

Group study room f

2. சந்தேகங்களை உடனுக்குடன் தீர்த்துக் கொள்ளலாம். பொதுவாக வகுப்புகளில் சந்தேகங்களை கேட்க எல்லோரும் பயப்படுவர். இதனால் பரீட்சை நெருங்கும் போது கூட சில சந்தேகங்கள் தேங்கிக் கிடக்கும். இதனை தவிர்க்க நண்பர்களுடன் உடனுக்குடன் கலந்துரையாடுவது சிறந்தது.

study-group2

3. கற்றலில் மிகச்சிறந்த முறையாக நான் கருதுவது கற்பித்தல் ஆகும். காரணம், இதன் போது எல்லோருடைய சந்தேகங்களுக்கும் விடை காண வேண்டி ஏற்படும். இதனால் விடயங்களை தெளிவாகவும், ஆழமாகவும் கற்க முடியும். எனவே குழுவாகக் கற்கும் போது கற்பித்தலுக்கான வாய்ப்பும் கிடைக்கிறது.

stock-photo-10163949-group-studygroup study room

4. வேலைகளை தாமதப்படுத்தல், ஒத்திவைத்தல் போன்றவற்றை தவிர்த்து உரிய நேரத்தில் உரிய வேலையை முடிக்கலாம். இல்லையேல் குழுவுடன் இணைந்து செல்ல முடியாமல் போய்விடும்.

5. சந்தேகங்கள் உடனுக்குடன் தெளிவுபடுத்தப்படுவதால் குழப்பங்களால் ஏற்படும் நேர விரயம் தடுக்கப்படும். அத்தோடு, குறிப்புகளிலுள்ள பிழைகளையும் திருத்திக் கொள்ளலாம்.

6. குறித்த விடயத்தை பல கோணங்களில் ஆராய்ந்து தெளிவாகவும், இலகுவாகவும் கற்கலாம். குழுவில் சில நண்பர்கள் இலகுவாக கற்கும் உத்திகளைக் கையாள்வர். எனவே இதன் மூலம் எல்லோரும் பயனடைந்து கொள்ள முடியும்.

7. தனிமையில் கற்கும் போது சில பாடங்கள் சோர்வைத் தரும். எனவே வினைத்திறனான குழு முறைக் கற்றலால் அப் பாடங்களை வெற்றிகரமாகக் கற்று முடிக்கலாம்.

8. அடிக்கடி கேள்விகளைக் கேட்டு எம்மை பரிசோதிப்பதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

9. கற்றலை சிரமமான ஒன்றாக அன்றி, இனிமையாக ஆக்கிக் கொள்ளலாம்.

10. கடந்த கால வினாத்தாள்களை செய்யும் போது போட்டி காரணமாக அதிக கவனத்துடன் செய்ய வேண்டி ஏற்படும். இதனால் சிறு சந்தேகங்கள் கூட  தெளிவாவதோடு பரீட்சை பழகிய ஒன்றாகிவிடும்.

 

குழுவாகக் கற்கும்  போது கவனஞ்செலுத்த வேண்டிய விடயங்கள் யாவை?

02 social studies space 17

1. கற்றலில் ஆர்வமுள்ள, வகுப்புகளில் ஒழுங்காக கவனஞ்செலுத்துகின்ற, சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெறுவதில் ஆர்வமுள்ள நண்பர்களையே இணைத்துக் கொள்க.

2. 3-4 பேருக்கு மேல் குழுக்களில் இருப்பது சிறந்ததல்ல.

3.முதலில் குழுவாகக் கற்பது உங்களுக்கு பொருத்தமானதா என சோதிக்க ஒரு வாரத்தை ஒதுக்குங்கள். 

4. வேறுபட்ட திறமையுள்ள நண்பர்கள் இருப்பது கற்றலை மேலும் இலகுபடுத்தும். உதாரணமாக, படங்களை இலகுவாக வரைதல், ஞாபக சக்திக்கான உத்திகளை கையாளல் போன்றன.

5. எல்லோரும் உரிய நேரத்தில் கற்றலுக்கு தயாராதல் வேண்டும்.

6. ஒருவரை ஒருவர் மதித்து நடத்தல்.

7. ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய நாள் பற்றி கலந்தாலோசிப்பதோடு, அடுத்த நாளை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

8. வாரத்திற்கு ஒரு முறை குழுவிற்கு ஒரு தலைவரை நியமித்துக் கொள்க. இதன் மூலமாக முடிவுகளை இலகுவாகவும், பிரச்சினையின்றியும் எடுத்துக் கொள்ளலாம்.

9. கற்பித்தலை சுழற்சி முறையில் மேற்கொள்வதன் மூலம் எல்லோரும் கற்பிக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்க.

10. அடிக்கடி உங்களுக்கு இடையே பரீட்சைகளை நடாத்தி உஙகள் நிலையை அறிந்து கொள்க.

11. அடுத்தவரை நம்பிச்செல்லாது தமக்குத் தேவையானவற்றை தாமே எடுத்துச் செல்ல வேண்டும்.

 

குழுவாகக் கற்கும் போது எழக்கூடிய பிரச்சினைகளும், தீர்வுகளும்.

1. கஷ்டமான பகுதிகள் ஆளுக்காள் வேறுபடும். இவர்கள் தனியாகக் கற்றலுக்கு நேரத்தை ஒதுக்கி அவற்றை கற்ற பின் நண்பர்களுடன் கலந்துரையாட வேண்டும்.

2. நேர முகாமைத்துவம் பேணப்படாமை. இதற்காக சிறிய தண்டனைகளை நீங்களே தீர்மானித்துக் கொள்க.

3. கற்றல் தவிர்ந்த விடயங்களில் கவனம் செலுத்தப்படுவதாக உணர்ந்தால், யாராவது ஒரு பெரியவரின் கண்காணிப்பின் கீழ் கற்க முயற்சிக்க. இல்லையேல் உடனே பிரிந்து தனியாகி கற்க. குறிப்பிட்ட ஒரு நண்பரால் பிரச்சினை எனின் அவரிடம் நேரடியாக கதைத்து கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்துக.

How-we-study-with-our-friends-group-study-problems

4. சிலர் கலந்துரையாடலின் போது தமது கருத்துக்களையே கூறிக் கொண்டு இருப்பர். இதனால் அப் பகுதி தெளிவற்றோர் பின் தங்கி விடுவர். இதன் போதும் நேரடியாக அவரிடம் விடயத்தை எடுத்துச் சொல்லி கலந்துரையாடலில் எல்லோரும் சம அளவில் பங்கு கொள்ள வேண்டும்.

5. தொடரச்சியாக ஒவ்வொரு நாளும் குழுவாகக் கற்க வேண்டும் என்று அவசியமில்லை. கிழமையில் குறிப்பிட்ட சில நாட்களை இதற்காக ஒதுக்கிக் கொள்ளலாம். அல்லது பாடசாலையில் கிடைக்கும் ஓய்வு நேரங்களையாவது திட்டமிட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

6. கற்கும் காலப்பகுதியில் மனதை புத்துணர்ச்சியாக வைத்திருக்க சில பொழுதுபோக்குகளும் அவசியமாகும். இப்படியான சந்தர்ப்பங்களிலும் குழுவாக அவற்றில் ஈடுபடல் உங்களுக்கிடையே புரிந்துணர்வை அதிகரிக்கச் செய்யும்.

study-group

7. உயர்தரம் போட்டிப் பரீட்சை என்பதால் சிலர் இரகசிய கற்றலில் ஈடுபடுவர். இது முற்றிலும் பயனற்றது ஆகும். கற்பதை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளும் போதே அவை மனதில் பதியும் என்பது அனுபவ உண்மையாகும்.

  

குழுவாகக் கற்றல் தொடர்பான ஒரு சில விடயங்களையே இங்கு குறிப்பட்டுள்ளேன். உங்கள் சந்தேகங்கள், கருத்துக்கள் மற்றும் அனுபவங்கள் போன்றவற்றை எம்மோடு பகிர்ந்து கொள்வது மேலும் பயனுள்ள பல விடயங்களை வழங்குவதற்கு எமக்கு ஊக்கமளிக்கும்.