கற்கும் காலத்தில் உணவின் பாலான கவனம் எமக்கு மிகக் குறைவாகவே காணப்படும். எனினும், ஆரோக்கியமானது எமது கற்றலில் போதியளவு செல்வாக்குச் செலுத்துவதை மறுக்க முடியாது. ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தினூடாக கற்றலை மேலும் வினைத்திறனாக்கிக் கொள்ளலாம். எனவே, இப்பழக்கத்தை உங்களில் ஏற்படுத்த ஒரு தூண்டுதலாக இக்கட்டுரை அமையுமென நினைக்கிறேன்..........
ஆரோக்கிய உணவின் பிரதான பகுதி காலை உணவாகும். பெரும்பாலும் காலையில் அவசரமாக வகுப்புகளுக்குச் செல்லும் போது நாம் தவரவிடுவதும் இதனைத்தான். சில வேளை வகுப்புகளிலும் கவனஞ்செலுத்த முடியாமல் போய்விடும். எனவே இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலகுவாக உண்ணக் கூடிய போசணையான உணவுகளை கொண்டு செல்ல வேண்டும்.
துரித உணவுகள் என்றும் ஆரோக்கியத்திற்கு கேடானவை என்பது நீங்கள் அறிந்ததே! எனவே, முடியுமானவரை அவற்றை தவிர்த்துக் கொள்ளுங்கள். குறிப்பாக பரீட்சை நெருங்கும் போது முற்றாக தவிர்ந்திருத்தல் சிறந்தது.
ஆரோக்கியமான உணவுகளையே உங்கள் கற்கும் அறைகளில் வைத்துக் கொள்க. யோகட், பழங்கள்............... போன்றவை.
அதிக இனிப்பான உணவுகள் கூடிய கலோரியுடையவை எனினும் போசணை மிகக் குறைவு. எனவே அவ்வகையான உணவுகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
காபோகைதிரேட்டு, புரதம், விட்டமின்கள், கனியுப்புக்கள், கொழுப்பு போன்றவற்றை உரிய அளவில் கொண்ட சமநிலையான உணவை உண்ணுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
போதியளவு நீரினை அடிக்கடி அருந்துதல், வெளியில் செல்லும் போது தண்ணீர்ப் போத்தலை கொண்டுசெல்லல் போன்ற செயற்பாடுகள் உங்களை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
click here for some healthy food tips
click here to know the importance of healthy food habit
FEEL FREE TO SHARE YOUR COMMENTS !