• Forumஇல் search செய்யுங்கள் 

நீங்கள் வினவ இருக்கும் கேள்வி forum இல் ஏற்கனவே கேட்கப்பட்டு விடயளிக்கப்பட்டதாக இருக்கலாம். ஆகவே, எதையும் வினவும் முன்னர் forum இல் search செய்து பாருங்கள்.

  • புதிய topic ஆரம்பிப்பது பற்றி 

உங்களுடைய கேள்விகள் விரைவாகவும் பொருத்தமாகவும் விடயளிக்கப்படுவதட்கு கீழ்வரும் விதிகளை கையாளுங்கள்.

பொருத்தமான "Category" மற்றும் "Topic icon" ஐ தெரிவு செய்யுங்கள் 

  1. உங்களுடைய postக்கு பொருத்தமான "Category"ஐ தெரிவுசெய்யுங்கள். 
    • முக்கிய குறிப்பு: பொருத்தமற்ற Category களுக்குள் பதிவுகள் இடுவதை தவிர்க்கவும்.
  2. பின்னர் கீழ் காட்டப்பட்டவாறு உங்களுடைய postக்கு பொருத்தமான "Topic icon" ஐயும் தெரிவுசெய்யுங்கள்.

பொருத்தமான "Subject" ஐ type செய்யுங்கள் 

  1. உங்களுடைய postஇற்கு உரிய தலைப்பே "Subject" என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தலைப்பு forumஇல் "recent posts" எனும் பக்கத்தில் அனைவரினதும் கவனத்துக்கு இடப்படுகிறது. ஆகவே, இத்தலைப்பானது உங்களுடைய postஐ சுருக்கமாக விளக்குவதாக அமைய வேண்டும். 
  2. தவிர்க்க வேண்டியவை: உங்களுடைய postஐ சுருக்கமாக விளக்குவதல்லாமல் பொதுவான தலைப்புகளை "Subject" ஆக type செய்ய வேண்டாம். உதாரணமாக:
    • Doubt in Biology
    • Note தேவை
    • MCQ doubt
    • தொண்டமானாறு paper
  3. வரவேற்கத்தக்கவை: சிறந்த உதாரணங்கள்:
    • Nutrition - Vit B12 இன் தொழில் என்ன?
    • 2012/m/23 - உராய்வு சம்பந்தமான இந்த கேள்வி விளங்கவில்லை! (m-MCQ, s-Structure, e-Essay)
    •  தொண்டமானாறு/g13/t2 - Fe மற்றும் H2SO4 இடையிலான தாக்கம் பற்றியது?
    • அசேதன இரசாயனத்தில் HCl பற்றிய notes தேவை!

"Message" பகுதியில்..

  1. தேவையான அனைத்து தரவுகளும் உள்ளடங்குமாறு உங்களுடைய கேள்வியை விளக்கமாக type செய்யுங்கள்.
  2. நீங்கள் கேட்கும் வினாவானது ஒரு past paper/Model paper/Tute இல் உள்ள வினாவாக இருந்தால் அதற்குரிய Photo ஐ post இல் இணையுங்கள் அல்லது முழு கேள்விக்குரிய தரவுகள் அனைத்தையும் type செய்யுங்கள் 
  3. Type செய்யும்போது SMS இல் பாவிக்கும் சுருக்கமான மொழிநடைகள் உபயோகப்படுத்த வேண்டாம்.
  4. எழுத்து பிழைகளை இயன்ற அளவு தவிர்த்து கொள்ளுங்கள்.
  5. தமிழ் எழுத்துகளை ஆங்கிலத்தில் type செய்யும்போது கருத்து மாற்றம் ஏற்படாதவாறு கவனமாக type செய்யுங்கள்.
  6. தமிழில் type செய்வது எப்படி என தெரிந்து கொள்ள இந்த link ஐ click செய்யுங்கள் - தமிழில் type செய்வது எப்படி?

"Attachments" பகுதியில்...

  1. உங்களுடைய postக்கு தகுந்த கோப்புகளை (Files) இதில் இணையுங்கள். (pdf, Word, Photo, Excel, etc.)
  2. உங்களுடைய கேள்விட்குரிய photo ஐ இணையுங்கள். (கேள்வியை type செய்வதை விட இது வரவேற்கதக்கது.)
  3. photoஐ Attachments பகுதியில் இணைத்தபின்னர் "insert" செய்வதன் மூலம் அந்த photo உங்களுடைய கேள்விக்கு கீழ் பெரிதாக பார்வைக்கு இடப்படும்.

ஒன்றுக்கு அதிகமான photoகள் post செய்வதென்றால்...

  1. எல்லா photosகளையும் ஒரு postஇலேயே இணைக்கவும்.
  2. photoகளை "insert" செய்ய வேண்டாம்.
  3. 10இற்கும் மேற்பட்ட photosகளை இணைக்கவேண்டுமேன்றால் அல்லது, ஒன்றுக்கு மேற்பட்ட photosகளை உங்களுடைய phone மூலம் இணைக்க முடியவில்லை என்றால் கீழ்வரும் உத்திகளை கையாளவும்.
    1. Topicஐ ஆரம்பித்து இயன்றளவு photoகளை இணைக்கவும்.
    2. பின் "Submit" செய்துவிட்டு மீண்டும் உங்கள் postக்கு சென்று "Edit" செய்யவும்.
    3. இப்போது மேலும் பல photosகளை இணைக்கக்கூடியதாக இருக்கும். இணைத்தபின் "Submit" செய்யவும்.
    4. இவ்வாறு உங்களுக்கு தேவயான அனைத்து photosகளையும் இணைக்கும் வரை மீண்டும் மீண்டும் "edit" செய்யலாம்.
  4. Exam papers/ebooks/tutes/notes இணக்க வேண்டுமென்றால்..
    1. பல photoகள் இணைப்பதை விட முழுமையாக ஒரு pdfஐ இணைப்பது விரும்பத்தக்கது.
    2. உங்களுடைய smartphoneஐ பயன்படுத்தி pdf உருவாக்குவதற்கு இந்த tutorialஐ பின்பற்றுங்கள். -  Smart phone இல் pdf உருவாக்குவது எவ்வாறு?
    3. Windows PC இல்  pdf உருவாக்குவதற்கு இந்த tutorialஐ பின்பற்றுங்கள். - Windows PC இல் pdf உருவாக்குவது எப்படி?